பிகார் கோயிலில் கூட்டநெரிசல்! 8 பெண்கள் பலி!
பிகார் கோயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டது பற்றி...
பிகார் கோயிலில் கூட்டநெரிசல் சிக்கி 8 பெண் பக்தர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.
நாலந்தா மாவட்டத்தின் மக்ரா கிராமத்தில் உள்ள சீதளா தேவி கோயிலில் நடைபெற்ற பூஜையில் செவ்வாய்க்கிழமை காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தலா ரூ. 6 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.