செய்திகள்

வெளியானது மகாமுனி டீஸர்! வாவ் சொல்ல வைத்த அட்டகாசமான விடியோ!

2011-ம் ஆண்டு வெளியான மெளன குரு படத்தை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

சினேகா

2011-ம் ஆண்டு வெளியான மெளன குரு படத்தை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படமது. அதன் பின் கிட்டத்தட்ட எட்டு ஆண்டு கழித்து தனது இரண்டாம் படத்தை இயக்கியுள்ளார் சாந்தகுமார். மகாமுனி என்ற வித்யாசமான தலைப்பிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார் இயக்குநர். ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

இப்படத்துக்கு எஸ்.எஸ் தமன் இசையமைக்க, அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஆர்யா இந்தப் படத்தில் மூன்று விதமான கெட்டப்புக்களில் வருகிறார். அவரது மனைவியாக இந்துஜா, மற்றும் இளம் பத்திரிகையாளராக மகிமா ஆகியோரின் புகைப்படங்கள் ஃபஸ்ட் லுக்காக வெளியாகி உள்ளன. இந்தப் புகைப்படங்களு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 

நடிகர் ஆர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT