செய்திகள்

‘லஷ்மி பாம்ப்’ (லஷ்மி வெடி) ஹிந்தி திரைப்படத்தில் இருந்து ராகவா லாரன்ஸ் விலகல்!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இயக்குனரான தனக்கு தகவலேதும் இல்லை. யாரோ மூன்றாம் நபர் சொல்லித்தான் அதை நான் அறிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது.

சரோஜினி

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த காஞ்சனா 1 திரைப்படத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கப்போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது. தமிழில் சரத்குமார், திருநங்கையாக நடித்து பட்டையைக் கிளப்பிய திரைப்படம் அது. அதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகன். அவரது கதாபாத்திரத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் ஏற்று நடிக்க, அத்திரைப்படம் ‘லஷ்மி பாம்ப்’ என்று பெயரிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி விட்டது. அந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். 

அதற்கு காரணமாக அவர் சுட்டுவது; 

ஹிந்தி தயாரிப்புக் குழுவினர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இயக்குனரான தனக்கு தகவலேதும் இல்லை. யாரோ மூன்றாம் நபர் சொல்லித்தான் அதை நான் அறிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. அத்துடன், தான் இயக்கவிருக்கும் திரைப்படமான அதில், தனக்கே தெரியாமல், தனக்குப் பிடிக்காத ஒரு டேஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் ராகவா லாரன்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்ளலாம், ஆனால், சுயமரியாதைக்கு பங்கம் வரத்தக்க அளவிலான எந்த ஒரு அவமரியாதையையும் தன்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்றும் ராகவா லாரன்ஸ் ’லஷ்மி பாம்ப்’ படத்தில் இருந்து தனது விலகலுக்கு விளக்கம் அளித்துள்ளார். தவிர, ஒரு நடிகராக அக்‌ஷய் குமார் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு என்றும், படத்திலிருந்து தனது விலகலை நேரில் சென்று அக்‌ஷய் குமாரிடம் தெரிவித்து விட்டு படத்தின் ஸ்கிரிப்டையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு வரவிருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT