முகப்பு
செய்திகள்

தம்பி ஆத்விக்குடன் அஜித் மகள் அனோஷ்கா! வைரலாகும் புகைப்படம்

விஸ்வாசம் பட வெற்றியைத் தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

Updated On : 6 நவம்பர், 2019 at 3:34 PM
anoshka shalini and ajith
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:30 PM

விஸ்வாசம் பட வெற்றியைத் தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் கதாநாயகி தேர்வுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.

அஜித் பற்றிய சிறிய செய்தி என்றாலும் அவரது ரசிகர்கள் பரபரப்பாகி விடுவார்கள். நாளை (நவம்பர் 7) நடக்கவிருக்கும் கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்க அஜித் வருவாரா என்று நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர். விஜய் படம் வெளியாகும் சமயங்களில் அஜித் பற்றிய சுவையான தகவல் அல்லது அவரது குடும்ப விஷயம் என்று ஏதாவது ஒன்றை ஹைலைட் செய்து சமூக வலைத்தளங்களில் அதை பிரபலமாக்கிவிடுவார்கள். இந்தியாவில் அதிக ஃபேன் ஃபாலோவர்கள் கொண்ட நடிகர் அஜித் என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்காவும் மகன் ஆத்விக்கும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் #Anoushka Ajith #AadvikAjith என்று ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது 'ஒற்றைப் படம் சோஷியல் மீடியாவையே ஆள்கிறது’. இது அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது எந்தளவுக்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.