செய்திகள்

மருதநாயகம் துவக்க விழாவுக்கு குயின் எலிஸபெத் வந்து சென்ற கதையைப் பற்றி கமல் ஹாசனின் சுவாரஸ்யமான பகிர்வு... 

சரோஜினி

‘அது... ஒரு கனவு மாதிரி நடந்து முடிஞ்சு போயிடுச்சு அது. ஏன்னா, நாங்க யாருமே போய் அழைக்கல, அதைச் சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க பலபேரு. அது எங்களுக்கு நிகழ்ந்த ஒரு அதிர்ஷ்டம், இந்தியாவுக்கு வந்திருக்காங்க,  தேடி இருக்காங்க, அந்த வருஷம் எனக்கு நேஷனல் அவார்டு வேற கிடைச்சிருந்ததனால எல்லோ பேஜஸ்ல என் பேர் இருந்துருக்குங்கிற மாதிரி இருந்திருக்கும், அவங்க தேடிக்கிட்டு வந்து, இந்த மாதிரி உங்க ஷூட்டிங் பார்க்க வருவாங்க .will you come and join with queen and you escort her arround ன்னு கேட்டாங்க. நான் இன்னொன்னு கேட்டேன், என்னுடைய பூஜையும் அந்த நேரத்துல நடந்ததுன்னா அதுல கலந்து கொள்வாங்களா? பூஜைன்னு சொல்லல நான் Inauguration ன்னு சொன்னேன். Inauguration ல கலந்து கொள்வாங்களான்னு கேட்டேன். கேட்டு சொல்றோம்னு சொல்லிட்டு, இன்னும் ஒரு மாசத்துல சொல்றேன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் நானே மறந்துட்டேன். அதுக்கப்புறம் ராஜஸ்தானுக்கு புறப்பட்டு போறதுக்கான ஏற்பாடுகளை நான் பண்ணிட்டு இருக்கும் போது இங்க பல ஸ்ட்ரைக்ku, குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டது. நீங்க போகக்கூடாதுன்னு சொன்னாங்க, இவங்க வேற போகக்கூடாதுன்னு சொல்றாங்க, அவங்களும் பதில் சொல்லல அப்படின்னு யோசிச்சிட்டு விட்றலாம், சரி Inaugural Function அப்புறமா ஒரு மாசம் தள்ளி பண்ணிக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணோம். சரி அப்போ ஷூட்டிங்க ஏன் நிறுத்தனும்? பண்ணி வச்சிக்கிட்டா திடீர்னு வந்து சொன்னாங்கன்னா என்ன பண்றது? அந்தப் படத்தோட டிரைலரை செஞ்சு வச்சுக்கனும், எனக்கும், என்னை வந்து பரீட்சித்துப் பார்த்தா மாதிரி இருக்கும்னு ஒரு ஆசை இருந்தது. சோதனை முயற்சியாக இதை செய்தே ஆகனும். பல விஷயங்களுக்கு பதில், இதுல தான் வந்து கிடைக்கும்னு இதை செய்றதுக்கு ஆர்வமா இருந்தேன். நாங்க லோகேஷன் பார்க்க கிளம்பும் போது டயானாவோட மரணச் செய்தி வந்தது. அப்போ, சரி கண்டிப்பா இனி குயின் வரவே மாட்டாங்க, அவங்களப் பத்தி மறந்துரலாம், நம்ம வேலைய நம்ம பார்த்துக்கலாம்னு போயிட்டுத் திரும்பி வரும்போது சந்தோஷச் செய்தி காத்திருந்தது. அவங்க சொன்னபடி இந்தத் தேதிகள்ல வராங்கன்னு.. அதுல எனக்கு மாத்திரம் கொஞ்சம் பயமாவே இருந்தது. ஏன்னா, மருதநாயகம் என்ற யூசுஃப்கானை தூக்கிலிட்ட நாள் வந்து அக்டோபர் 14 ஆம் தேதி. அன்னைக்கு தான் அவங்க இந்தியால லேண்ட் ஆகறாங்க. அவங்க என் ஃபங்ஷனுக்கு வரும் போது கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள், 16 ஆம் தேதி மருதநாயகத்தை சம்மட்டிபுரம் என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நாள். சரி இதையெல்லாம் அவங்க கிட்ட சொல்ல வேண்டாம். வெறும் தேதியை மட்டும் சொல்லலாம்னு சொன்னதுல தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. எதுவுமே நாங்க முன்கூட்டியே பிளான் பண்ணல. அந்த ஃபங்ஷனை நல்லா நடத்தனும், எல்லாரையும் கூப்பிடனும், அதுல கூட சிலருக்கு அழைப்பு அனுப்பாம இருந்துட்டோம்னா அதுக்கு காரணம் கோடம்பாக்கத்து அரசியல் சூழல் தான். பெரிய பெரிய அரசியல்வாதிகளுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பிட்டு நெருங்கிய நண்பர்கள் பல பேரை மறந்துட்டோம். பல பேரு வருத்தமே பட்டுக்கிட்டாங்க. அதுக்கு காரணம் எங்களுடைய பதட்டம் தானே தவிர, இன்னாரை அழைக்கலாம், இன்னாரை அழைக்கக் கூடாதுங்கறதில்லை. குயினோட இருக்கற ஹால்ல மாத்திரம் எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட்ரிக்‌ஷன் இருந்தது. மத்தபடி ரொம்ப ஆச்சர்யமா இருந்தது எங்களுக்கே! அதை அதிர்ஷ்டம்னு தான் சொல்லனும்.’

முழு நேர்காணலை இங்கே காணலாம்..

- முதல்வன் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் கமல், மாலா மணியனுக்கு ஒரு நேர்காணல் அளித்திருந்தார். தூர்தர்ஷனுக்காக எடுக்கப்பட்ட அந்த நேர்காணலில் கமலின் நேர்மையான பேச்சு மிக அருமை.

Image Courtesy: Wikibio

நன்றி: தூர்தர்ஷன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT