அனைவரும் எதிர்பார்த்த ‘சிங்கப் பெண்ணே’ பாடலின் விடியோ!
இந்தப் படத்தில் இடம்பெற்று மிகவும் புகழ்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலின் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்று மிகவும் புகழ்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலின் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.