செய்திகள்

குஜராத்தை சேர்ந்த குல்பி ரேகா கதாநாயகியாக நடிக்கும் படம் கானல்!

மீனவ குப்பத்தில் நடக்கும் வியாபார போட்டி, மோதல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'கானல்'.

DIN

மீனவ குப்பத்தில் நடக்கும் வியாபார போட்டி, மோதல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'கானல்'.  மீனவ குப்பம் ஒன்றில் இரு தரப்புக்கு இடையே ஏற்படும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மீன்களைப் பிடிப்பதும், அதை விற்பனை செய்வதற்காக மட்டுமே இந்தப் பிரச்னை என்று நினைத்தால், அந்த மீன்களை கொண்டு அதன் மூலம் போதை பொருள்களை வெளிநாட்டுக்குக் கடத்துவதில் ஒரு கும்பல் தீவிரம் காட்டுகிறது. 

பின் அந்தக் கும்பலை வெளியுலகத்திற்குக் காட்டி சட்டத்தின் முன் நிறுத்துவதே கதை. இதனால் அந்தக் குப்பத்தில் நடக்கும் பிரச்னைகள் என்ன அரசியல் பின்னணி என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லுவதே திரைக்கதை. 

கதை எழுதி தயாரித்து நடிக்கிறார் கே. சுரேஷ். குஜராத்தை சேர்ந்த குல்பி ரேகா கதாநாயகியாக நடிக்கிறார். 'பருத்தி வீரன்' சரவணன், கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும கடற்கரை சாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT