முகப்பு
செய்திகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாக, திரையுலகில் அறிமுகமாகும் உலக அழகி!

2017-ல் உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியரான மனுஷி சில்லார், திரைப்பட நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

Updated On : 15 நவம்பர், 2019 at 3:43 PM
பகிர்:

2017-ல் உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியரான மனுஷி சில்லார், திரைப்பட நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் உருவாகவுள்ள பிருதிவிராஜ் படத்தில் பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லார். 12-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஆண்ட மன்னர் பிருத்விராஜ் செளகானைப் பற்றிய இந்தப் படத்தில் பிருத்விராஜ் வேடத்தில் அக்‌ஷய் குமாரும் சன்யோகிதா வேடத்தில் மனுஷி சில்லாரும் நடிக்கவுள்ளார்கள்.

இந்தப் படம் 2020 தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.