செய்திகள்

இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ தர்ஷன்!

இந்தப் படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன...

எழில்

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத், ஒளிப்பதிவு - ரத்னவேலு.

இந்நிலையில் இந்தப் படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் பரிந்துரையில் தர்ஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது. பிக் பாஸிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய தர்ஷனிடம் கமல் இந்தப் படத்தின் கதாபாத்திரம் குறித்துப் பேசியதாகவும் படத்தில் நடிக்க தர்ஷன் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பில் தர்ஷன் விரைவில் கலந்துகொள்ளவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT