செய்திகள்

பிரபலங்களுக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா?: பாடலாசிரியர் விவேக் பதில்!

கடந்த 10 நாள்களில் 15 முதல் 17 பாடல்களை எழுதியுள்ளேன். அப்பாடல்களை நான் எழுதாவிட்டால்...

எழில்

ட்விட்டரில் விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானிடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு அவர்களைப் பாராட்டி தனது கருத்தைப் பதிவு செய்தார் ஷாருக் கான். இதைப் பாடலாசிரியர் விவேக் ரீட்விட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட ரசிகர் ஒருவர் விவேக்கிடம், எல்லோருக்கும் ஜால்ரா போடுவது நன்றாக இல்லையே என்றார். 

பாடலாசிரியர் விவேக் இதற்குப் பதில் அளித்ததாவது: 

இதுபோன்று நினைப்பவர்கள் குறித்து என்னால் எதுவும் செய்யமுடியாது.

கடந்த 10 நாள்களில் 15 முதல் 17 பாடல்களை எழுதியுள்ளேன். அப்பாடல்களை நான் எழுதாவிட்டால் வேறு எங்காவது வேலை செய்துகொண்டிருப்பேன். ஜால்ரா போட வேண்டிய அவசியமே தேவை இல்லை. ஒரு பெரிய கலைஞன், நம் ஊர் நடிகர்கள் பற்றிப் பேசும்போது பெருமையாக உள்ளது. அதனால் அதைப் பகிர்ந்தேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

SCROLL FOR NEXT