பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரலாகியிருக்கிறது.
சர்வதேச பாப் நட்சத்திரம் ரிஹானா, இந்திய வருகையின்போது, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரதநாட்டிய அபிநயங்களை செய்த விடியோ வைரலாகியிருக்கிறது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் சமூக ஊடகப் பிரபலமான நெஜ்ம், ரிஹானாவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்த விடியோவை பகிர, அது லைக்குகளை அள்ளி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நெஜ்ம், பரதநாட்டிய அபிநயங்களைக் கற்றுக்கொடுக்க அதனை, ரிஹானாவும் அப்படியே செய்து காட்டியிருக்கிறார்.
Advertisement
Advertisement
மும்பையில் அழகுசாதனப் பொருளை அறிமுகம் செய்ய வந்த ரிஹானாவின் இந்த அழகு முத்திரைகள் சமூக ஊடகங்களில் காற்றைப் போல பறந்து லைக்குகளைக் குவித்து வருகிறதாம்.
ஆன்லைன் பிரபலங்கள் மற்றும் தன்னுடைய ரசிகர்களுடன் ரிஹானா பேசி மகிழ்ந்த தருணங்களும் வைரலாகி வருகிறது.
நேர்காணல் ஒன்றில், இந்திய கலாசாரம் பற்றி அதிகமாக அறிந்துகொண்டேன். மிகவும் அழகாக உள்ளது என்று ரிஹானாவும் பதிலளித்திருக்கிறார்.
A video of Rihanna performing Bharatanatyam has gone viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.