செய்திகள்

கவின் - லாஸ்லியா ஜோடிக்குப் புதிய வாய்ப்பு!

கவின் - லாஸ்லியா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் தோன்றவுள்ளது. விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான

எழில்

விஜய் தொலைக்காட்சியில் 100 நாள்களுக்கும் அதிகமாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற நடிகர் கவின் - இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் லாஸ்லியா ஆகிய இருவரும் மக்களிடையே அதிகக் கவனம் பெற்றார்கள். பிக் பாஸ் இல்லத்துக்குள்ளேயே இவர்களுடைய நட்பு அடுத்தக் கட்டத்துக்குச் சென்றதால் பல சர்ச்சைகள் உருவாயின. 

இந்நிலையில் கவின் - லாஸ்லியா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் தோன்றவுள்ளது. விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான ராஜா - ராணியின் அடுத்தப் பாகத்தில் கவினும் லாஸ்லியாவும் ஒன்றாக நடிக்க வேண்டும் என்று அவர்களிடம் விஜய் டிவி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் அதிகக் கவனம் செலுத்துவேன் என கவின் சொன்ன நிலையில் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்வாரா என்பது இனிமேல் தான் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT