செய்திகள்

விக்ரம் படத்தில் நடிகராக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்!

இந்திய அணியில் குறுகிய காலம் ஆல்ரவுண்டராகக் கலக்கிய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தமிழ்ப் படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். 

எழில்

இந்திய அணியில் குறுகிய காலம் ஆல்ரவுண்டராகக் கலக்கிய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தமிழ்ப் படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். 

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.

அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பது குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் படம் இது. 

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ள நிலையில் மற்றொரு கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான், விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT