முகப்பு
செய்திகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்

மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்த கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 24 படத்தை தயாரிக்கிறது.

Updated On : 17 அக்டோபர், 2019 at 11:27 AM
keerthi suresh
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:54 PM

மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்த கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 24 படத்தை தயாரிக்கிறது.

கீர்த்தி சுரேஷ் அண்மையில் உடல் எடை குறைத்து பாலிவுட் படமொன்றிலும், தெலுங்கில் மிஸ் இந்தியா எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டிலை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் பரிசாக இன்று காலை 11:11 மணிக்கு கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி ‘பென்குவின்’ என்ற தலைப்பிட்ட அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Advertisement

ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.