செய்திகள்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியீடு தள்ளிவைப்பு!

இதையடுத்து சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் நாளை வெளியாகும் என...

எழில்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படம், செப்டம்பர் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குச் சில கடன்கள் நிலுவையில் உள்ளதால் அந்தப் பிரச்னை காரணமாக இப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

SCROLL FOR NEXT