செய்திகள்

ஆஷஸ்: இங்கிலாந்து 382 ரன்கள் முன்னிலை

DIN

ஆஸி. அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 5}ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294, ஆஸ்திரேலியா 225 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. 
இதன் தொடர்ச்சியாக தனது இரண்டாவது இன்னிங்ûஸ ஆடி வரும் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில், மூன்றாவது நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 91 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோன் டென்லி 94, பென் ஸ்டோக்ஸ் 67, ஜோஸ் பட்லர் 47 ரன்களை விளாசி அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தினர்.
ஆஸி. தரப்பில் நாதன் லயன் 3}65, மிசசெல் மார்ஷ் , பீட்டர் சிடில் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்ச்சர் 3, ஜேக் லீச் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
இதையடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT