செய்திகள்

இளையராஜா - யுவன் இசையமைக்கும் ‘மாமனிதன்’ படத்துக்குப் பாடல்கள் எழுதும் பா. விஜய்!

எழில்

ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஒருவேளை இந்தப் படத்திலாவது அது சாத்தியமாகுமா என. ஆனால் வழக்கம்போல ரசிகர்கள் எதிர்பார்க்கும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி இந்தமுறையும் நிகழவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைக்கிறார்கள். மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது. 

சீனு ராமசாமியின் முதல் படம் தவிர்த்து அடுத்து அவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. அதுமட்டுமல்லாமல், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தக் கூட்டணி தற்காலிகமாகப் பிரிந்துள்ளது. 

கமல் நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு கருத்துவேறுபாடுகள் காரணமாக இளையராஜா - வைரமுத்து கூட்டணி பிரிந்தது. சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் தொடருமா என்கிற சிறு நம்பிக்கையும் ஆவலும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டில், பா. விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் மாமனிதன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT