தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ரம்யா என்எஸ்கே. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கேவின் பேத்தி இவர். கடந்த வருடம் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கலந்துகொண்டு கவனம் பெற்றார்.
இந்நிலையில் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் ரம்யா என்எஸ்கே. இத்திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான மும்தாஜ், ஜனனி மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்கள்.
ரம்யாவின் கணவர் சத்யா, மன்னர் வகையறா படத்திலும் நீலக்குயில் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.