செய்திகள்

ரூ. 5 லட்சத்துக்காக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு கவின் வெளியேறினாரா?

ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியே செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்று...

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டிவி வெளியிட்ட விளம்பரத்தில் ரூ. 5 லட்சத்துக்காக நடிகர் கவின் வெளியேற முயற்சி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தைப் பெறமுடியும். இதனிடையே ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியே செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்று போட்டியாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, ரூ. 5 லட்சம் உள்ள பெட்டியை நோக்கி கவின் நகர முயற்சிக்கும் காட்சி இன்றைய விளம்பரத்தில் வெளியாகியுள்ளது. இதனால் கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய நிகழ்ச்சியில் தான் மேலும் விவரங்கள் தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT