செய்திகள்

குமுதா ஹேப்பி அண்ணாச்சி: அஸ்வினின் குதூகலத்துக்குக் காரணம் என்ன?

DIN

விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா தொடரை மீண்டும் ஒளிபரப்புவதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 59,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் உள்ளார்கள். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா தொடரை மீண்டும் ஒளிபரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின், குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்கிற ட்வீட்டுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்ப் படங்களைக் கிண்டல் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்ட லொல்லு சபா நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. சந்தானம், ஜீவா, மனோகர், சுவாமிநாதன் எனப் பலருக்கும் பெரிய திரையில் நுழையவும் அதிக வாய்ப்புகள் கிடைக்கவும் லொல்லு சபா நிகழ்ச்சியே உதவியது. 2004-ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 2007 வரை ஒளிபரப்பானது.

லொல்லு சபா நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஓளிபரப்பாகும் என்கிற அறிவிப்பை ரசிகர்கள் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள். அந்த நேரத்தில் தூக்கத்தை விட்டு, டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பது சிரமம் என்பதால் நேரத்தை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT