பட அறிவிப்பை வெளியிடலாமா?: ரசிகர்களிடம் கருத்து கேட்கும் விஷ்ணு விஷால்!
தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை நாளை (ஏப்ரல் 11) வெளியிடலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை நாளை (ஏப்ரல் 11) வெளியிடலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தான் அவர் கடைசியாக நடித்து வெளிவந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய புதிய படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 11 அன்று வெளியிடுவதாக இருந்தார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் புதிய பட அறிவிப்பை வெளியிடுவது குறித்து விஷ்ணு விஷாலுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை நாளை வெளியிடலாமா என ட்விட்டரில் ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். ரசிகர்கள் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறியுள்ளார்.