இயக்குநர் அட்லி வழங்கும் அந்தகாரம்!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2017-ல் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார் அட்லி. இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக வெளியிடும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்தகாரம் என்கிற படத்தை அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ளார். இசை - பிரதீப் குமார். இப்படத்தின் டிரெய்லரை நாளை வெளியிடவுள்ளதாக அட்லி அறிவித்துள்ளார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். முழுப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் அட்லி. கரோனா நிவாரணமாக இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 5 லட்சமும் பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு ரூ. 5 லட்சமும் வழங்கியுள்ளார்.