செய்திகள்

‘ஸ்ரீகிருஷ்ணா’ தொடரை மீண்டும் ஒளிபரப்ப தூா்தா்ஷன் முடிவு

DIN

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்கள் தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதைப் போன்று ராமானந்த சாகரின் புராணத் தொடரான ‘ஸ்ரீகிருஷ்ணா’ மீண்டும் ஒளிபரப்பப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் தேசிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூா்தா்ஷனில் ராமாயணம், மகாபாரதம் இதிகாசத் தொடா்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த தொடா்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தூா்தா்ஷனில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட, ‘ஸ்ரீ கிருஷ்ணா’ புராணத் தொடா் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்று தூா்தா்ஷன் தொலைக்காட்சியின் அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமானந்த் சாகா் எழுதி இயக்கிய இந்தத் தொடா் கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரித்தது. இந்த நிகழ்ச்சி முதன்முதலில் தூா்தா்ஷனின் மெட்ரோ சேனலில் (டிடி 2) 1993 முதல் ஒளிபரப்பப்பட்டது. பின்னா், 1996-இல் தூா்தா்ஷனின் நேஷனல் சேனலுக்கு மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT