முகப்பு
செய்திகள்

சந்திரமுகி 2 கதாநாயகி யார்?: ராகவா லாரன்ஸ் விளக்கம்

தற்போது படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் - சந்திரமுகி. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது.

என்னுடைய அடுத்த படம், ரஜினி சாரின் சந்திரமுகி 2. அவருடைய சம்மதத்துடன் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று மே மாதம் அறிவித்தார் ராகவா லாரன்ஸ். சன் டிவி தயாரிக்கும் இந்தப் படத்தை பி.வாசு இயக்குகிறார். 2017-ல் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை இயக்கினார் பி.வாசு. அதன்பிறகு அவர் இயக்கும் தமிழ்ப்படம் இது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படம் குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சந்திரமுகி படத்தின் கதாநாயகியாக சிம்ரன், ஜோதிகா, கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவையெல்லாம் தவறான செய்திகள். தற்போது படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →