மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை
நடிகரும், மருத்துவருமான சேதுராமன் சென்னையில் கடந்த மார்ச் மாதம் இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.
மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகரும், மருத்துவருமான சேதுராமன் சென்னையில் கடந்த மார்ச் மாதம் இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.
‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சேதுராமன், அதைத் தொடா்ந்து, ‘வாலிப ராஜா’, ‘சக்கபோடு போடு ராஜா’ உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளாா். பிரபல தோல் மருத்துவரான அவா் இதய செயலிழப்பால் உயிரிழந்தது தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.
சேதுராமனின் மனைவி பெயர் உமையாள். 2016-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். சேதுராமன் மறைவின் போது உமையாள் 2-வது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.