செய்திகள்

பெண் குழந்தைக்குத் தந்தையானார் நடிகர் நகுல்

தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார்கள் நகுலும் ஸ்ருதியும்..

DIN

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.  

2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார்கள் நகுலும் ஸ்ருதியும். இதையடுத்து திரையுலகினர் பலரும் நகுலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT