முகப்பு
செய்திகள்

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவது எப்போது?: அபிஷேக் பச்சன் பதில்

கடந்த 26 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக் பச்சன்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

அமிதாப் பச்சன் (77), அவரது மகன் அபிஷேக் பச்சன் (44) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் (46), அவரின் பேத்தி ஆராத்யா (8) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.

இந்நிலையில் கடந்த 26 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக் பச்சன், இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

மருத்துவமனையில் 26-வது நாள். டிஸ்சார்ஜ் திட்டம் - இல்லை, பச்சன், உன்னால் முடியும். நம்பிக்கை கொள் என்று எழுதியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →