செய்திகள்

மீரா மிதுனுக்கு நடிகை சனம் ஷெட்டி எச்சரிக்கை

உங்களுக்குப் பதில் தர அவர் இறங்கி வர மாட்டார். உங்களுக்குப் பதில் சொல்ல நான் போதும்.

DIN

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார். 

ட்விட்டரில் நடிகர் விஜய்யைப் பற்றி அவர் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

வாரிசு சலுகையால் விஜய் திரைத்துறைக்குள் வந்ததாகக் கூறியிருக்கிறீர்கள் மீரா. எஸ்.ஏ.சி.யால் சினிமாவுக்குள் அவர் சுலபமாக நுழைந்திருக்கலாம். ஆனால் 5 வருடங்கள் கஷ்டப்பட்ட பிறகு தான் முதல் வெற்றியை அடைந்தார். முதல் படத்திலேயே நிறைய விமர்சனங்கள் வந்தன. திறமை, உழைப்பால் தான் இன்று அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இதைப் பணத்தால் வாங்க முடியாது. 

அங்கீகாரம் பெற்ற நடிகரைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். உங்களுக்குப் பதில் தர அவர் இறங்கி வர மாட்டார். உங்களுக்குப் பதில் சொல்ல நான் போதும். இணையத் துன்புறுத்தல்களை நிறுத்திக்கொள்ளவும். இதை நீங்கள் தான் செய்கிறீர்கள். இதனால் உங்களுக்குப் புகழ் கிடைக்கலாம். இத்துடன் நிறுத்திவிடுங்கள். உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். அதனால் அதனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT