செய்திகள்

83, அக்‌ஷய் குமாரின் சூர்யவன்ஷி படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்பு!

இந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக...

DIN

பெரிய பாலிவுட் படங்களான சூர்யவன்ஷி மற்றும் 83 ஆகிய இரு படங்களும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. திரைப்படப் படப்பிடிப்புகள் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். 83-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு அக்‌ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். கத்ரினா கயிப், ஜாக்கி ஷெராப் போன்றோர் நடித்துள்ளார்கள். அஜய் தேவ்கனும் ரன்வீர் சிங்கும் கெளரவ வேடங்களில் நடித்துள்ளார்கள். 

சூர்யவன்ஷி படம் தீபாவளி அன்றும் 83 படம் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் வெளியாகும் எனச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பல பெரிய ஹிந்திப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக ரிலையன்ஸ் எண்டர்டயிண்மெண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷிபாசிஷ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தகவல் தெரிவித்ததாவது:

83 மற்றும் சூர்யவன்ஷி படங்களைத் திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறோம். அதேசமயம் வெளியீட்டுத் தேதியை மேலும் ஒத்திவைக்க விரும்பவில்லை. திரையரங்குகள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓடிடி தளங்களில் வெளியாகக் கூடிய இதர அம்சங்களைப் பரிசீலிப்போம். இதுபற்றி படக்குழுவினருடன் விவாதிப்போம். எனினும் இந்த இரு படங்களையும் தீபாவளி, கிறிஸ்துமஸ் தினங்களில் பெரிய திரையில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றே நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT