முகப்பு
செய்திகள்

கரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி.பி. குணமாகவில்லை: சரண் தகவல்

கரோனா பாதிப்பிலிருந்து பாடகர் எஸ்.பி.பி. குணமாகவில்லை என அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

கரோனா பாதிப்பிலிருந்து பாடகர் எஸ்.பி.பி. குணமாகவில்லை என அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குக் கடந்த 5-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி.க்குச் சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாடகர் எஸ்.பி.பி. மீண்டுள்ளதாக இன்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதை எஸ்.பி. சரண் மறுத்துள்ளார். இதுபற்றி வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது:

மருத்துவக் குழுவினரிடம் பேசிய பிறகு தந்தையின் உடல்நலன் பற்றிய தகவல்களை நான் வெளியிடுவது வழக்கம். தந்தை பற்றி தகவல்களை நான் மட்டுமே மருத்துவமனையிலிருந்து பெறுகிறேன். எனக்குத்தான் முதலில் தகவல் வரும். பிறகுதான் அத்தகவலைச் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன். 

கரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி.பி. மீண்டு விட்டதாக ஒரு வதந்தி இன்று பரவியுள்ளது. கரோனாவிலிருந்து மீண்டுவிட்டாரா இல்லையா என்பதை விடுங்கள், அவருடைய உடல்நிலை இப்போதும் அதேபோலத்தான் உள்ளது. எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. நல்லவேளையாக உடல்நிலை சீராக உள்ளது. இதனால் அவர் பாதிப்பிலிருந்து அவர் விரைவில் மீண்டு விடுவார் என நம்பிக்கையுடன் உள்ளோம். எனவே வதந்திகளை நம்பாதீர்கள். மருத்துவக் குழுவினருடன் விவாதித்து இன்று மாலை தகவல் கூறுகிறேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →