முகப்பு
செய்திகள்

எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: சரண் தகவல்

பாடகா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

பாடகா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவா் உடல்நிலை சீராக உள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று தகவல் தெரிவித்ததாவது:

மருத்துவர்களிடம் இன்று பேசினேன். எஸ்.பி.பி., மயக்க நிலையிலிருந்து 90% மீண்டுவிட்டார். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம். என்னிடமிருந்து தகவல்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இன்று நல்ல நாள். 

தமிழிலும் தகவல்களை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இந்தியா முழுக்க தந்தைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். எல்லா மொழிகளிலும் அப்பாவின் உடல்நிலை குறித்து தகவல் சொல்வதற்கு நீண்ட நேரமாகும். எனவே நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு மற்றவர்கள் தகவல்களைத் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →