முகப்பு
செய்திகள்

லாபம் படம் ஓடிடியில் வெளியாகாது: விஜய் சேதுபதி அறிவிப்பு

லாபம் படம் ஓடிடியில் வெளியாகாது என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

லாபம் படம் ஓடிடியில் வெளியாகாது என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடித்துள்ள தமிழ்ப் படம் இது.இசை - இமான். கடந்த ஆகஸ்ட் மாதம் டிரெய்லர் வெளியானது.

இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்றொரு செய்தி வெளியானது. இதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார்.

லாபம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது. திரையரங்கில் பெரிய அளவில் வெளியிடப்படும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.