கர்ணன் படப்பிடிப்பு நிறைவு: தனுஷ் நெகிழ்ச்சி
கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை அளித்த மாரி செல்வராஜுக்கும்...
செய்திகள்கர்ணன் படப்பிடிப்பு நிறைவு: தனுஷ் நெகிழ்ச்சி
கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை அளித்த மாரி செல்வராஜுக்கும்...
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ்.
கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்துக்குப் பிறகு கர்ணன் படம் வெளிவரவுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன்.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.
இந்நிலையில் கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
கர்ணன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை அளித்த மாரி செல்வராஜுக்கும் ஆதரவு அளித்த வி கிரியேஷன்ஸ் தாணு சாருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. இந்தச் சிறப்பான படத்துக்கு அற்புதமான இசையை அளித்த சந்தோஷ் நாராயணனுக்குச் சிறப்பு நன்றி என்றார்.