முகப்பு
செய்திகள்

சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகும் படம்: அடுத்த மாதம் வெளியாகிறது!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை சபரிஷ் இயக்கியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

சமீபத்தில் மறைந்த நடிகை சித்ரா, கதாநாயகியாக நடித்துள்ள கால்ஸ் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா். இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவா் ஹேம்நாத்துடன் தங்கியிருந்தாா். கடந்த புதன்கிழமை அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நசரத்பேட்டை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் சித்ரா கதாநாயகியாக அறிமுகமான கால்ஸ் என்கிற தமிழ்ப் படம் ஜனவரியில் வெளிவரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை சபரிஷ் இயக்கியுள்ளார். மார்ச் மாதம் கால்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜூலையில் வெளியிட இருந்தார்கள். ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிப் போனது. திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டிருப்பதால் ஜனவரி மாதம் கால்ஸ் படத்தை வெளியிடுவது என முடிவெடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.