சிரஞ்சீவி படத்தை இயக்குகிறார் மோகன் ராஜா: அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் மோகன் ராஜா.
ஜெயம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. எடிட்டர் மோகனின் மூத்த மகன், நடிகர் ஜெயம் ரவியின் சகோதரர்.
2015-ல் இவர் இயக்கிய தனி ஒருவன் பெரிய வெற்றியை அடைந்தது. கடைசியாக, மோகன் ராஜா இயக்கத்தில் 2017-ல் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் வெளிவந்தது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் மோகன் ராஜா. இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:
என்னுடைய பெற்றோர் மற்றும் ரசிகர்களின் ஆசிர்வாதங்களுடன் வாழ்க்கை எனக்கு சிறந்ததையே தந்துள்ளது. இந்தமுறை மெகாஸ்டார் சிரஞ்சீவியை வைத்து ஒரு பெரிய இடத்தை இயக்குகிறேன். உங்களுடைய வாழ்த்துகள் எனக்குத் தேவை. சிரஞ்சீவி 153, அவருடனான 2-வது படம். 1997-ல் பெரிய வெற்றியை அடைந்த ஹிட்லர் படத்தை என் தந்தை மோகன் தயாரித்தார். 2001-ல் ஹனுமன் ஜங்க்ஷன் படத்தில் அறிமுகமான பிறகு மீண்டும் தெலுங்குப் படத்தை இயக்கிறேன் என்றார்.
கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் தற்போது நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இது அவருடைய 152-வது படம். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. இது அவருடைய 152-வது படம்.