தந்தை - மகன் வேடத்தில் நடிக்கும் எம்.எஸ். பாஸ்கர் - சந்தானம்
சந்தானம் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவருகின்றன.
சந்தானம் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவருகின்றன.
அறிமுக இயக்குநர் ஆர். சீனிவாசனின் படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ஆர்கே எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் - கும்பகோணம், திருச்சி, சென்னையில் படமாக்கப்படவுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
மகன் - தந்தை உறவைச் சொல்லும் இப்படத்தில் தந்தை வேடத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்கிறார்.
சந்தானம் நடித்த ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன்.கே அடுத்ததாக சந்தானத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்த்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் தில்லுக்கு துட்டு 2, ஏ1 ஆகிய படங்களில் நடித்த சந்தானம், இந்த வருடம் டகால்டி, பிஸ்கோத் ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிக்கிலோனா என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.