செய்திகள்

நயன்தாரா, விக்னேஷ் சிவனை வியக்க வைத்த படம்!

மிக அரிதாக ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும்...

DIN

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்ஸர்ஸ் நிறுவனம், கூழாங்கல் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது.  

புதுமுகங்கள் நடித்த படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இசை - யுவன் சங்கர் ராஜா. 

கூழாங்கல் படம், ரோட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் கலந்துகொள்கிறது. இத்தகவலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தைத் தயாரிக்கும் ரெளடி பிக்சர்ஸ், அடுத்ததாக கூழாங்கல் படத்தைத் தயாரித்துள்ளது. 

மிக அரிதாக ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் படத்தைப் பார்த்த போது அப்படித் தோன்றியது. இப்படத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழுத் தயாரிப்பை பொறுப்பேற்றுள்ளோம் என நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

கூழாங்கல் படத்தின் டிரெய்லரையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT