முகப்பு
செய்திகள்

லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லேவின் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்ட அமிதாப்

லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லேவின் சிறு வயது புகைப்படங்களை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:


மும்பை: லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லேவின் சிறு வயது புகைப்படங்களை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருப்பு வெள்ளை நிறப் புகைப் படத்தில் லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே சகோதரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இன்று காலை லதா மங்கேஷ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஆன்மிகக் குரு பண்டிட் ஜம்மு மகாராஜ் மற்றும் மறைந்த கவிஞர் நரேந்திர ஷர்மா ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இந்த டிவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமிதாப்  வெளியிட்ட டிவிட்டர் பதிவில், புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் ஹிந்தியில் கூறியிருப்பதாவது, லதா ஜி மற்றும் ஆஷா ஜியின் சிறுவயது புகைப்படங்கள் இவை. லதா ஜி தனது குருவுக்கு நினைவு கூரும் டிவிட்டர் பதிவைப் பார்த்ததும் எனக்கு இந்த புகைப்படங்கள் நினைவுக்கு வந்தன என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.