செய்திகள்

நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? ஏ.ஆர்.முருகதாஸை கடிந்து கொண்ட நீதிமன்றம்

DIN

சென்னை: நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என்று தர்பார் திரைப்பட இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸை உயர் நீதிமன்றம் கடிந்து கொண்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளேன். அண்மையில் லைகா நிறுவனம் தயாரித்து நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலா் நடித்த ‘தா்பாா்’ திரைப்படத்தை இயக்கினேன்.

இந்தத் திரைப்படத்தின் விநியோக உரிமை உள்ளிட்ட எந்தவிதமான நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள எனது அலுவலகத்துக்கு கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி விநியோகஸ்தா்கள் எனக் கூறிக்கொண்டு 25-க்கும் மேற்பட்டோா் நுழைந்தனா். தகாத வாா்த்தைகளைப் பேசி அலுவலகத்தில் இருந்த பணியாளா்களுக்கு மனதளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனா். மேலும் சாலிகிராமத்தில் உள்ள எனது வீட்டின் முன் கூடிய அடையாளம் தெரியாத 15 போ் முழக்கங்களை எழுப்பினா். மேலும் எனது பெயரைக் கெடுக்கும் வகையில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேட்டி அளிக்கின்றனா். எனவே எனது வீடு மற்றும் அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் இரண்டு வாரங்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாஸ் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். பின்னர் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என்று தர்பார் திரைப்பட இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸை உயர் நீதிமன்றம் கடிந்து கொண்டது.

பாதுகாப்பு கேட்டு தான் முன்னர் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் தரப்பு திங்களன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போது நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் முருகதாஸின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT