செய்திகள்

99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்

இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் 99 சாங்ஸ் என்கிற படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

எழில்

இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் 99 சாங்ஸ் என்கிற படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 99 சாங்ஸ் படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

99 சாங்ஸ் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்தப் படத்தை உங்களுடைய தாய்மொழியான தமிழில் தயாரிக்காமல் ஹிந்தியில் தயாரித்தது ஏன் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் பதில் அளித்ததாவது:

நான் ஏன் ஹிந்தியில் இப்படத்தைத் தயாரிக்கக் கூடாது? நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். அதனால் தமிழில் சுலபமாக இப்படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தப் படத்தின் கதை தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் உரியது என எண்ணினேன். நீங்கள் தமிழ்ப் படத்தை எடுத்து அதை ஹிந்தியில் டப் செய்தால், அது தென்னிந்தியப் படமாக இருக்கும். ஆனால் இங்கு இது அனைவருக்குமானது. இந்தக் கதையும் கதையின் பின்புலமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என எண்ணினேன் என்று பதில் அளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT