அசுரன் தெலுங்கு ரீமேக்கில் ப்ரியா மணி!
தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரிக்கிறார்கள். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இது அவருடைய 74-வது படம்.
தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 22 முதல் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார்.
Advertisement
இந்தப் படத்துடன் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் ப்ரியாமணி நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.