செய்திகள்

விந்து தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமிது! 'தாராளப் பிரபு’வின் ஃபர்ஸ்ட் லுக் 

DIN

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தாராளப் பிரபு என்று பெயரிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (ஜன.10) தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த விக்கி டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக் இப்படம். தாராளப் பிரபு படத்தின் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் பிரம்மா போன்ற பல தலைகள் மற்றும் கைகளுடன் காணப்படுகிறார், காலை மடக்கி உட்கார்ந்து, பல குழந்தைகளை வைத்திருக்கிறார். இந்தப் படம் விந்து தானம் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யாவின் 'யுத்தம் ஷரணம்' படத்தை இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து தாராளப் பிரபுவை இயக்கியுள்ளார். தடம் படப் புகழ் தன்யா ஹோப் மற்றும் விவேக் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய பொழுதுபோக்குப் படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளது.  இந்த மார்ச் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இதற்கு முன் இயக்குநர் சஞ்சய் பாரதியின் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் அடுத்து பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக், கசட தபர, சசியுடன் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் சஞ்சய் பாரதியுடன் ஒரு படம் என கைநிறையப் படம் வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT