முகப்பு
செய்திகள்

ஜேஎன்யு தாக்குதல் சம்பவத்தைத் தேசியப் பிரச்னையாக்காதீர்கள்: நடிகை கங்கனா ரனாவத் வேண்டுகோள்

கல்லூரி வன்முறைகளைத் தேசியப் பிரச்னையாக்கக் கூடாது எனப் பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

Updated On : 11 ஜனவரி, 2020 at 12:52 PM
பகிர்:

கல்லூரி வன்முறைகளைத் தேசியப் பிரச்னையாக்கக் கூடாது எனப் பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

பங்கா என்கிற படத்தில் நடித்துள்ள கங்கனா, அதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

ஜே.என்.யூ. -வில் மாணவர்கள் தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தில் ஜே.என்.யூ., ஏபிவிபி என இரு யூனியன்கள் உள்ளன. கல்லூரி வாழ்க்கையில் குழுச் சண்டை என்பது சாதாரணமானது. கல்லூரியில் ஆண்கள் விடுதிக்கு அருகே இருந்த பெண்கள் விடுதியில் நான் தங்கிப் படித்தேன். ஒருவரைப் பின்தொடர்ந்து பட்டப்பகலிலேயே கொலை செய்தார்கள். ஒருமுறை எங்கள் விடுதிக்குள் ஒருவன் நுழைந்தான். அவனை ஒரு குழு கொல்லக் காத்திருந்தது. பிறகு எங்கள் விடுதி மேலாளர் தான் அவனைக் காப்பாறினார். 

Advertisement

இதுபோன்ற குழுச் சண்டைகளை மிகவும் ஆபத்தான, சக்தி வாய்ந்த நபர்கள் இயக்குகிறார்கள். இதனால் இரு பக்கமும் இழப்புகள் நேர்கின்றன. இதுபோன்ற கல்லூரி வன்முறைகளைத் தேசியப் பிரச்னையாக்கக் கூடாது. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை சிறைக்காவலில் வைத்து ஒவ்வொருவருக்கும் நான்கு அறை விட வேண்டும். இத்தகைய குற்றவாளிகள் ஒவ்வொரு தெருவிலும் கல்லூரியிலும் உள்ளார்கள். அவர்களின் செயலைத் தேசியப் பிரச்னையாக்கக் கூடாது. அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் அல்லர் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முகமூடி அணிந்த மா்ம நபா்கள் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்துக்குள் புகுந்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்குதல் நடத்தினா். இதில் 35 போ் காயமடைந்தனா். ஜேஎன்யு-வில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய 9 பேரை தில்லி காவல் துறை அடையாளம் கண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.