செய்திகள்

புதிய ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வரமாக அமைந்துள்ளன.

DIN

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வரமாக அமைந்துள்ளன. திரையரங்குகள் கிடைக்காமல் தவித்த பல படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகவுள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

அந்தகாரம், அண்டாவ காணோம், வா டீல், காக்டெயில், டேனி போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாவதைச் சமீபத்தில் உறுதி செய்தன. இந்நிலையில் கரு. பழனியப்பன் நடித்துள்ள கள்ளன், குழந்தைகள் படமான மங்கி டாங்கி, தேவதாஸ் ஆகிய படங்கள் தி ஏலி (theally.com) என்கிற புதிய ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.

ராம் கோபால் வர்மாவின் புதிய படமான நேக்ட், அந்த ஓடிடி தளத்தில் வெளியானதால் அதற்கு நல்ல கவனம் கிடைத்தது.

தி ஏலி தளத்தில் போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம், அதர்வா நடித்த செம போதை ஆகாத, காதல் கசக்குதய்யா ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT