முகப்பு
செய்திகள்

விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மோசடி: காவல்துறையில் புகார்!

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை, 2020 at 5:40 PM
பகிர்:

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நடிகர் விஷால். துப்பறிவாளன், சக்ரா ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் அலுவலகம் சென்னை வடபழனியில் குமரன் காலனியில் உள்ளது.

இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வடபழனி காவல்துறை உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த பெண் ஒருவர் ரூ. 45 லட்சத்தைக் கையாடல் செய்துவிட்டதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேலாளர் புகார் அளித்துள்ளார். 

Advertisement

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த பெண் ஒருவர், சிறிது சிறிதாகப் பணத்தைக் கையாடல் செய்துள்ளார். ஆறு வருடங்கள் பணியாற்றி ரூ. 45 லட்சம் மோசடி செய்துள்ள அந்தப் பெண், கையாடல் பணத்தின் மூலம் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். இதனால் அவர் கோடிக்கணக்கில் பணத்தைக் கையாடல் செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.