செய்திகள்

நடிகர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, படப்பிடிப்புகளை நிறுத்துங்கள்: பிபாசா பாசு கோரிக்கை

கரோனாவால் நடிகர்கள் சுலபமாகப் பாதிக்கப்படுவதால் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டும் என்று பிரபல நடிகை பிபாசா பாசு கோரிக்கை விடுத்துள்ளார்.

DIN

கரோனாவால் நடிகர்கள் சுலபமாகப் பாதிக்கப்படுவதால் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டும் என்று பிரபல நடிகை பிபாசா பாசு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹிந்தி தொலைக்காட்சி நடிகரான பர்த் சம்தான், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா ஊரடங்கால் 3 மாதங்கள் கழித்து ஏக்தா கபூர் தயாரிக்கும் ஹிந்தித் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் பர்த் சம்தான். கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டதால் ஞாயிறன்று படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பர்த் சம்தானுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் இணைந்து நடித்த நடிகர்களுக்கும் தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதை முன்வைத்து பிபா பாசு கூறியதாவது:

நிலைமை சரியாகும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும். கரோனாவால் நடிகர்கள் சுலபமாகப் பாதிக்கப்படுகிறார்கள். படப்பிடிப்புக் குழுவினர் பல்வேறு விதமான பாதுகாப்பு கவசங்கள் அணிகிறார்கள். ஆனால் எவ்விதப் பாதுகாப்புக் கவசங்களும் இன்றி நடிகர்கள் நடிக்க வேண்டியிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். 

பர்த் சம்தான் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடரில் பிபாசாவின் கணவர் கரண் சிங்கும் நடித்தார். ஆனால் ஊரடங்கு தளர்வுகளால் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியபோதும் அத்தொடரிலிருந்து கரண் சிங் விலகிவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

SCROLL FOR NEXT