முகப்பு
செய்திகள்

கணக்காளர் ரம்யாவைத் தொடர்பு கொள்ள வேண்டாம்: விஷால் பட நிறுவனம் கோரிக்கை

விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் கணக்காளர் ரம்யாவைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

விஷால் ஃபிலிம் பேக்டரி தொடர்பாக கணக்காளர் ரம்யாவைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடிகா் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல் செய்ததாக, பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 

நடிகா் விஷாலின், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் வடபழனி, குமரன் காலனியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளா் சாலிகிராமத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.

அதில், நடிகா் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணத்தை அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வந்த சாலிகிராமம் ரத்தினம்மாள் காலனியைச் சோ்ந்த ரம்யா கையாடல் செய்திருப்பதாகவும், அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வந்தனா். இந்நிலையில் போலீஸாா் ரம்யா மீது மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். 

இந்நிலையில், விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் கணக்காளர் ரம்யாவைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ. 45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதைக் கண்டறியப்பட்டு காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, விஷால் ஃபிலிம் பேக்டரியில் ரம்யா இனி பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →