முகப்பு
செய்திகள்

நினைவு நாள்: சிவாஜி கணேசன் திருவுருவப் படத்துக்கு குடும்பத்தினர் மரியாதை

பிரபு, ராம்குமார் ஆகிய இருவரும் சிவாஜியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாள்.

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகராக வலம் வந்து, தன் நடிப்பால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சிவாஜி கணேசன். அவர் நடிப்பில் உருவான பல திரைப்படங்கள், அந்தக் காலத்திலேயே பெரும் வசூலை குவித்து சாதனை படைத்தன. திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி காலமானார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள அன்னை இல்லத்தில், சிவாஜி கணேசனின் 19-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது மகன்களும் நடிகர்களுமான பிரபு, ராம்குமார் ஆகிய இருவரும் சிவாஜியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூகவலைத்தளங்களில் சிவாஜியைப் போற்றி பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →