செய்திகள்

ட்விட்டரிலிருந்து விலகினார் வனிதா விஜயகுமார்!

திருமண சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக ட்விட்டரிலிருந்து விலகியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

DIN

திருமண சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக ட்விட்டரிலிருந்து விலகியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா். 

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல நடிகை வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக திருமண சர்ச்சை தொடர்பாக யூடியூப் தளங்களில் வெளியிட்ட பேட்டிகளிலும் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகளிலும் வனிதா விஜயகுமார், கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய மூவருக்கும் இடையிலான கருத்து மோதல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் திடீரென ட்விட்டரிலிருந்து விலகியுள்ளார் வனிதா விஜயகுமார். இதுதொடர்பாக அளித்த ஒரு பேட்டியில், சினிமா பிரபலங்கள் தங்களை நேர்மையாகக் காட்டிக்கொள்ள ட்விட்டரில் தந்திரமாகச் செயல்படுகிறார்கள். எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது பண்பாடு அல்ல. எதிர்மறையான எண்ணங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT