செய்திகள்

படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை, ஓடிடி வெளியீடு கிடையாது: விஷாலின் சக்ரா படக்குழு

DIN

விஷால் நடித்துள்ள சக்ரா படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் - சக்ரா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி படம் வெளிவருவதாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சக்ரா படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் படக்குழு இதை மறுத்துள்ளது. இன்னும் 7 நாள் படப்பிடிப்பு மீதமுள்ளது. அரசு அனுமதி அளித்தவுடன் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும். அக்காட்சிகளுக்குக் கூட்டமோ நிறைய நடிகர்களோ தேவையில்லை. அதிகப் பொருட்செலவில் சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதால் ஓடிடியில் நேரடியாக வெளியாகாது. நிச்சயமாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT